பூங்காவில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நடிகர் - பகீர் வாக்குமூலம்!
துணை நடிகர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை
சென்னை மதுரவாயலை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனின் பெற்றோர், போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், "என்னுடைய மகன், பள்ளி விடுமுறை நாளில் ஆலப்பாக்கத்தில் உள்ள ஒரு பூங்காவிற்கு விளையாட செல்வது வழக்கம்.
அப்போது, அங்கிருந்த இளைஞர் ஒருவர், எனது மகனை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில்,
அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சம்பவத்தன்று சிறுவனுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது அம்பலமானது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது அரி என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் அரி(21).
துணை நடிகர் கொடுமை
அவரை கைது செய்து விசாரித்ததில், தான் சினிமா துறையில் பணிபுரிந்து வருவதாகவும், பல்வேறு பிரபல நடிகர்களுடன் தனக்கு பழக்கம் இருப்பதாகவும் கூறி, அவர்களுடன் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோக்களை எல்லாம் தன்னுடைய செல்போனில் காண்பித்துள்ளார்.
அந்த நடிகர்களை பார்க்க அழைத்துச் செல்வதாக கூறியிருக்கிறார். பிறகு, சிறுவனை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், தன்னுடன் திரைத்துறையில் பணியாற்றும் இளம்பெண்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.