கள்ளக்காதலனுடன் தோட்டத்து வீட்டில் மனைவி உல்லாசம் - நேரில் பார்த்த கணவன் வெறிச்செயல்!
மனைவியின் கள்ளக்காதலனை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விடாத காதலன்
கடலூரைச் சேர்ந்தவர் முருகவேல்(56). இவருக்கு 45 வயதில் மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 6 மாதத்திற்கு முன், வடுகன்காளிபாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் மூவரும் தங்கி வசித்துள்ளனர்.
முன்னதாக இவரது மனைவிக்கும், அவருடன் மில்லில் வேலைபார்த்த முனியாண்டி என்பவருக்கும் பழக்கம் எற்பட்டுள்ளது. அது நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. தொடர்ந்து இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்துள்ளனர்.
அப்போது முருகவேல் மனைவியை காணாமல் பல இடங்களில் தேடியுள்ளார். ஒருகட்டத்தின் முனியாண்டியுடன் இருப்பதை அறிந்துக்கொண்ட முருகவேல் அங்கு சென்று சமாதானம் பேசி மனைவியை அழைத்து வந்துள்ளார். பின் திருப்பூரில் தனியாக வீடு எடுத்து, அங்கு மனைவியுடன் குடும்பம் நடத்தியுள்ளார்.
கணவன் வெறிச்செயல்
ஆனால் அங்கேயும் முனியாண்டி தேடி வந்ததால் தோட்டத்து வீட்டிற்கு மாறியுள்ளார். இந்நிலையில் திடீரென தோட்டத்து வீட்டுக்குள் முனியாண்டி நுழைந்ததை பார்த்த முருகவேல், கத்தியை எடுத்து குத்தியுள்ளார்.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் முருகவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.