தங்கச்சியை கர்ப்பமாக்கிய கணவர் - உடந்தையாக இருந்த மனைவி

Pregnancy POCSO Dindigul
By Karthikraja Feb 04, 2025 07:00 PM GMT
Report

சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காதல் திருமணம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு நூற்பாலையில் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவிகிரி(வயது 27) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். 

vedasandur

அவருக்கு தன்னுடன் வேலை பார்த்து வந்த சிவரஞ்சனி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

6 மாத கர்ப்பம்

தம்பதிகள் நூற்பாலை வேலையை விட்டுவிட்டு பானிபூரி விற்கும் தொழில் செய்து வந்தனர். இவர்களுடன் மனநலம் பாதிக்கப்பட்ட சிவரஞ்சனியின் தங்கையான 15 வயது சிறுமியும் வசித்து வந்தார். 

சிறுமி கர்ப்பம்

திடீரென சிறுமிக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சிறுமியின் பெற்றோர் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்த போது அவர் 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

மனைவி உடந்தை

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் வடமதுரை மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் வடமதுரை மகளிர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ரவிகிரி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், இந்த செயலுக்கு அவரது மனைவி சிவரஞ்சனியும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து ரவிகிரி மற்றும் சிவரஞ்சனி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.