பழைய ஊழல் வழக்குகளில் களமிறங்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் - கலங்கும் திமுக!
ஊழல் வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று முதல் விசாரிக்க உள்ளார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
தமிழக அமைச்சர்கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோரை சொத்துக் குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகளில் இருந்து கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது.
தொடர்ந்து, இது தொடர்பான உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் விதமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து இருந்தார்.
மறு விசாரணை
அதனையடுத்து, தற்போது அமைச்சர்களாக இருக்கும் தங்கம் தென்னரசு, ஐ பெரியசாமி மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர்கள் மீதான வழக்குகளை இன்று முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கவுள்ளார்.
மேலும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போதைய அமைச்சர்களை வழக்குகளை விரைந்து விசாரித்து ஒரு சில மாதங்களில் தீர்ப்பளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் திமுக, அதிமுக மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.