கொல்லப்பட்டவர் நேரில் ஆஜர்; முன்னாடி வாங்க, உங்க காலை பாக்கணும் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

Tamil nadu Chennai Madras High Court
By Jiyath Sep 28, 2023 03:16 AM GMT
Report

கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தவறாக வழக்கு பதிவு

சென்னை சவுக்கார்பேட்டை சேர்ந்தவர் நந்தகிஷோர். இவர் தனக்கு கொலை இறத்தல் வருவதாக ஏழுகிணறு காவல் நிலையத்தில் மனதை கிஷோர் புகார் அளித்திருந்தார்.

கொல்லப்பட்டவர் நேரில் ஆஜர்; முன்னாடி வாங்க, உங்க காலை பாக்கணும் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்! | Man Pronounced Dead By Police Appeared In Court

இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் கொலை முயற்சிக்கு என்பதற்கு பதில் கொலை செய்ததாக வழக்கு பதிந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ராதேஷ் சியாம் சந்தக் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருதரப்பினரும் சமரசமாக செல்வதாகவும், அதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ராதேஷ் ஷியாம் சந்தக் உள்பட அனைவரும் மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதி உத்தரவு

இந்நிலையில் இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நந்தகிஷோர் என்பவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொல்லப்பட்டவர் நேரில் ஆஜர்; முன்னாடி வாங்க, உங்க காலை பாக்கணும் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்! | Man Pronounced Dead By Police Appeared In Court

இதனால் தவறாக வழக்குப் பதிவு செய்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல் கீழமை நீதிமன்ற நீதிபதி இயந்திரத்தனமாகச் செயல்பட்டுள்ளதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது அதிருப்தியை தெரிவித்தார். மேலும், வழக்கு விசாரணையின் போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இறந்தவரை நேரில் பார்க்கப் பயமாக உள்ளது. கொஞ்சம் முன்னால் வாருங்கள், உங்கள் கால்களைப் பார்த்துக் கொள்கிறேன் என நீதிபதி நகைச்சுவை செய்தார்.

இதனால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது. இதனையடுத்து நீதிபதி கூறியதாவது "வழக்கில் என்ன குற்றத்துக்காக, என்ன சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறோம் என்றுகூட தெரியாமல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். அந்த குற்றப்பத்திரிகையை நீதிபதியும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதுவெல்லாம் நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் செயலாகும். இதை இப்படியே விட்டுவிட முடியாது. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி, நீதிபதி ஆகியோர் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறேன்' என்று கூறி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார்.