ஸ்டாலின் அப்பா என் குழந்தைக்கு நீதி வேணும் - புகாரளித்த ஜாய் கிரிசில்டா!
மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜாய் கிரிசில்டா முதல்வரிடம் புகாரளித்துள்ளார்.
ஜாய் கிரிசில்டா
ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார்.
தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக கூறி ஜாய் கிரிசில்டா சென்னையில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். தற்போது ஜாய் தனது சமூக வலைதள பக்கத்தில்,
முதல்வரிடம் புகார்
“பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கர்ப்பமாக்கியது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்து 10 நாட்கள் ஆகிறது. இப்போது நான் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன்.
இந்த நிலையிலும், நான் என் பார்வையற்ற தாயுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்றேன். எனது புகாரின் நிலை என்ன ஆனது என்பது எனக்குத் தெரியவில்லை. இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜுக்கு விஐபி அந்தஸ்து அளிக்கப்படுகிறது.
மேலும் அவர் எனக்கு எதிராக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அப்பா உங்கள் அரசாங்கத்தை என்னைப் போன்ற பெண்கள் நம்புகிறார்கள். இதில் நீங்கள் தலையிட்டு நீதி வழங்குமாறு நான் உங்களிடம் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
எந்தவொரு விஐபியோ, ஒரு பிரபலமோ பெண்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றத்தைச் செய்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சுற்றித் திரிய முடியுமா? என் வயிற்றில் உள்ள குழந்தைக்கும், எனக்கும் நீதி வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.