எத்தனை கோடி கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன் - தூக்கியெறிந்த சுவாசிகா
நடிகர் ராம்சரண் உடன் நடிக்க வந்த வாய்ப்பை நடிகை சுவாசிகா நிராகரித்துள்ளார்.
நடிகை சுவாசிகா
லப்பர் பந்து படத்தில் இவர் நடித்த யசோதை கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் நடிகை சுவாசிகா விஜய். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா கூட்டணியில் உருவான ரெட்ரோ படத்தில் நடித்திருந்தார்.
சிறந்த நடிகைக்கான மாநில விருதை 'வாசந்தி' படத்தின் மூலம் வென்றவர். தற்போது தெலுங்கில் இருந்து அவருக்கு அதிகளவில் வாய்ப்புகள் வருகிறதாம்.
நடிக்க மறுப்பு
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுவாசிகா, "தொடர்ந்து அம்மா வேடங்கள் வருகின்றன. ராம் சரணின் அம்மாவாக நடிக்க அழைப்பு வந்தபோது அதிர்ச்சியாக இருந்தது.
பெத்தி என்ற பெரிய படத்தில் அந்தக் கதாபாத்திரத்துக்கு என்னை அழைத்தார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அந்தக் கதாபாத்திரத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
இப்போது ராம் சரணின் அம்மாவாக நடிக்க எனக்கு விருப்பமில்லை. பிறகு நடிக்கத் தோன்றினால் நடிக்கலாம். இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்." என்று தெரிவித்துள்ளார்.