ஆஸ்கர் விருது: நிர்வாணமாக வந்த WWE வீரர் ஜான் சீனா - அதிர்ச்சியடைந்த பிரபலங்கள்!

United States of America Hollywood Movies Hollywood World Oscars
By Jiyath Mar 11, 2024 06:37 AM GMT
Report

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பிரபல மல்யுத்த வீரர் ஜான் சீனா ஆடைகளின்றி தோன்றியது பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

ஜான் சீன 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 96-வது ஆஸ்கர் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை அறிவிக்க பிரபல WWE வீரர் ஜான் சீனா வந்தார்.

ஆஸ்கர் விருது: நிர்வாணமாக வந்த WWE வீரர் ஜான் சீனா - அதிர்ச்சியடைந்த பிரபலங்கள்! | John Cena Appears Without Clothes At The Oscars

அப்போது அவர் ஆடைகளின்றி மேடைக்கு வந்து விருதினை அறிவித்தார். அவர் ஆடையின்றி மேடையில் தோன்றியது அங்கிருந்த பிரபலங்களை அதிர்ச்சியிலும், சிரிப்பலையிலும் ஆழ்த்தியது.

இந்தியாவில் உலக அழகி போட்டி - பட்டம் வென்ற பெண் யார் தெரியுமா?

இந்தியாவில் உலக அழகி போட்டி - பட்டம் வென்ற பெண் யார் தெரியுமா?

சிரிப்பலை 

இதனைத் தொடர்ந்து 'புவர் திங்ஸ்' என்ற படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது வழங்கப்பட்டது. ஜான் சீனா விருதை அறிவித்த பிறகு, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த உடை அவருக்கு அணிவிக்கப்பட்டது.

ஆஸ்கர் விருது: நிர்வாணமாக வந்த WWE வீரர் ஜான் சீனா - அதிர்ச்சியடைந்த பிரபலங்கள்! | John Cena Appears Without Clothes At The Oscars

உடலில் ஆடைகள் இல்லாமல் நடக்க முடியாமல் ஜான் சீனா நடந்து வந்ததை பார்த்து அங்கிருந்தவர்கள் வயிறு குலுங்க சிரித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5