ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் ஆன முதல் இந்திய RRR பாடல் - வரலாற்று சாதனை!
ஆஸ்கார் இறுதிப்பட்டியலுக்கு RRR பட நாட்டுக்கூத்து பாடல் தகுதி பெற்றுள்ளது.
நாட்டுக்கூத்து பாடல்
2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பாடல் உள்பட பல்வேறு பிரிவுகளில் தேர்வுக்கு அனுப்பப்பட்ட படங்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,
இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம், செல்லோ ஷோ, ஆல் தட் ப்ரீத்ஸ், தி எலிபேண்ட் விஸ்பரஸ் உள்ளிட்ட படங்கள் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற போட்டியிட்டு வந்த நிலையில்,
சிறந்த பாடலுக்காக நாட்டு நாட்டு ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்கார் இறுதிப்பட்டியலுக்கு தகுதி பெற்ற முதல் தென்னிந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
ஆஸ்கார்
RRR பாடலான நாட்டு கூத்து பாடல் கோல்டன் குளோப்ஸில் 'சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான' விருதை பெற்று வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் உலகளவில் சுமார் 1000 கோடிகளை தாண்டி வசூல் செய்திருந்தது.