இஸ்ரேல் ராணுவத்துடன் கைகோர்த்த அமெரிக்கா? அப்படியே பல்டி அடித்த ஜோ பைடன்!
இஸ்ரேல் ராணுவத்துடன் அமெரிக்க படை கை கோர்க்கும் என சொல்லவில்லையென ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவம்
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏவுகணை தாக்குதல் மட்டுமல்லாமல், இஸ்ரேலின் பல்வேறு நகருக்குள் ஹமாஸ் படையினர் புகுந்து மக்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர்.
தற்போது இஸ்ரேல் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4,000த்தை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது சரமாரியாக குண்டுகளை வீசின.
ஜோ பைடன் உறுதி
இந்த மோதல் உலகப்போருக்கு வழிவகுக்கும் வாய்ப்பு அதிகம் என பல அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இநிந்லையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசிய ஜோ பைடன், இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள தேவையான அனைத்தையும் அமெரிக்கா உறுதி செய்யும்.
காசா மற்றும் மேற்கு கரையில் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.832 கோடி) நிதியுதவியை அமெரிக்கா அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அமெரிக்கா புறப்பட்ட பைடனின் செய்தியாளர்கள் போரில் இஸ்ரேல் ராணுவத்துடன் அமெரிக்கா கைகோர்க்கும் என கூறப்படுவதாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், அந்த தகவலில் உண்மையில்லை, நான் ஒருபோதும் அப்படி சொல்லவில்லை. காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செய்வதற்காக 20 டிரக்குகளை அனுமதிக்க எகிப்து அதிபர் ஒப்புக்கொண்டுள்ளார் எனக் கூறியுள்ளார்.