உலகப்போர் உறுதி; இஸ்ரேல் அமெரிக்காவை உள்ள இழுத்துவிட்டதே இதனால்தான் - எச்சரிக்கை!
உலகப்போருக்கான வாய்ப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப்போர்
அமெரிக்க பில்லியனர் மற்றும் ஹெட்ஜ் நிதி வழிகாட்டியான ரே டாலியோ இஸ்ரேல் போர் குறித்து சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸுக்கும் இடையே நிலவும் மோதலானது உலகப்போரை தூண்டிவிடும் வாய்ப்புகள் உள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 35 சதவீதமாக இருந்த ஒரு முழு உலகப் போருக்கான வாய்ப்புகளை 50 சதவீதமாக அதிகரித்துள்ளது பல வல்லரசு நாடுகள் கூட இதில் கலந்து கொள்ளும் அபாயம் உள்ளது. ஒரு முழுமையான உலகப் போரின் முதன்மையான ஆபத்து பற்றி கேட்டால் அமெரிக்காவும் சீனாவும் நேரடி மோதலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறு என்றுதான் சொல்வேன்.
வாய்ப்பு அதிகம்
இந்த இரண்டு இரண்டு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டால் கண்டிப்பாக இது உலகப்போராக மாறும். ஆனால் இப்போதைக்கு சீனா இதில் நேரடியாக மூக்கை நுழைக்கவில்லை. ஆனால் அது நடக்கும் பட்சத்தில் கண்டிப்பாக போர் கையை மீறி போகும் இந்த இரண்டு போர்களும் நேரடியாக ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையே மட்டும் இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.
இது புதிய உலக ஆர்டரை உருவாக்கும் போராக மாற போகிறது என எச்சரித்துள்ளார். ஏற்கனவே சிரியா போரில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போரிட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், ஈரான் போருக்கு உள்ளே வரும்.
வேறு வழியின்றி கட்டாயத்தின் பெயரில் அமெரிக்காவும் போருக்குள் வரும். இப்படி அமெரிக்காவை போருக்குள் கொண்டு வருவதற்கு திட்டமிட்டே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இப்படி செய்வதாக அரசியல் வல்லுனர்கள் விமர்சனம் வைக்கின்றனர்.