500 பேர் பலி; மருத்துவமனை தாக்குதலுக்கு காரணமே இஸ்லாமிய ஜிஹாத் தான் - இஸ்ரேல் குற்றச்சாட்டு!

Israel-Hamas War
By Sumathi Oct 18, 2023 11:01 AM GMT
Report

மருத்துவமனை தாக்குதலுக்கு காரணம் இஸ்லாமிய ஜிஹாத் என இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

மருத்துவமனை தாக்குதல்

இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏவுகணை தாக்குதல் மட்டுமல்லாமல், இஸ்ரேலின் பல்வேறு நகருக்குள் ஹமாஸ் படையினர் புகுந்து மக்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர்.

நேற்றைய 11வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4,000த்தை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இநிந்லையில், இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது சரமாரியாக குண்டுகளை வீசின.

இஸ்ரேல் விளக்கம்

இந்த தாக்குதலில் காசாவில் உள்ள அல்-அக்லி மருத்துவமனையில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு எதிரான கண்டனங்கள் கிளம்பின.

இந்த நிகழ்வை வன்மையாக கண்டித்த பாலஸ்தீனம், 3 நாள் தேசிய துக்க அனுசரிப்பை அறிவித்தது. இதற்கிடையில், ’அல் அலி மீது தாக்குதல் நடத்தியது தாங்கள் அல்ல’. காசாவில் செயல்படும் இஸ்லாமிய ஹிஜாத் என்ற பயங்கரவாதக் குழுவே மருத்துவமனை தாக்குதலுக்கு காரணம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

24 மணி நேரத்திற்கு மட்டும்தான் தண்ணீர் இருக்கு; ஐஸ்கிரீம் லாரியில் உடல்கள் - காசாவில் தவிக்கும் மக்கள்!

24 மணி நேரத்திற்கு மட்டும்தான் தண்ணீர் இருக்கு; ஐஸ்கிரீம் லாரியில் உடல்கள் - காசாவில் தவிக்கும் மக்கள்!

இஸ்ரேலை நோக்கி இந்த அமைப்பினர் ஏவிய ராக்கெட் ஒன்று, தோல்விகரமானதில், மருத்துவமனை மீது விழுந்து அது வெடித்திருப்பதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.