கொடூரமாக நடந்துக்கொள்ளும் இஸ்ரேல்; இரக்கமே இல்லையா - அதிரவைக்கும் வீடியோ!
இஸ்ரேல் காசா மீது நடத்தி வரும் தாக்குதல் தொடர்பான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏவுகணை தாக்குதல் மட்டுமல்லாமல், இஸ்ரேலின் பல்வேறு நகருக்குள் ஹமாஸ் படையினர் புகுந்து மக்களை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினர்.
இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4,000த்தை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது சரமாரியாக குண்டுகளை வீசின.
அதிர்ச்சி வீடியோ
இந்த தாக்குதலில் காசாவில் உள்ள அல்-அக்லி மருத்துவமனையில் 500 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
?FOOTAGE: Seems to show an Israeli military vehicle intentionally obstructing a Palestinian ambulance.
— Mario Nawfal (@MarioNawfal) October 19, 2023
If confirmed, no matter which side you're on, we all agree this is not acceptable.
Location: Near the Dheisheh camp in Bethlehem pic.twitter.com/ECxYuDh04r
இந்நிலையில் தாக்குதல் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி அதிரவைத்துள்ளது. அதில், ஒரு இஸ்ரேலிய இராணுவ வாகனம் வேண்டுமென்றே பாலஸ்தீனிய ஆம்புலன்ஸைத் தடுக்கும் விதமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
பெத்லகேமில் உள்ள டிஷே முகாமுக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதன் மூலம் இஸ்ரேலின் கொடூர முகம் தெரியவருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.