படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை; விவசாயிகளின் கடன் தள்ளுபடி - ராகுல் காந்தி உறுதி!

Indian National Congress Rahul Gandhi India Lok Sabha Election 2024
By Jiyath May 20, 2024 02:33 AM GMT
Report

படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை கிடைப்பதை இண்டியா கூட்டணி அரசு உறுதி செய்யும் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

உத்திர பிரதேச மாநிலம் புல்பூர் பகுதியில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரே மேடையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை; விவசாயிகளின் கடன் தள்ளுபடி - ராகுல் காந்தி உறுதி! | Job For Every Educated Youth Rahul Gandhi Promises

அப்போது பேசிய ராகுல் காந்தி "இன்று அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற போராட்டம் நடக்கிறது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அழிக்க நினைக்கிறது. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதை நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை கிடைப்பதை இண்டியா கூட்டணி அரசு உறுதி செய்யும்.

அதிமுகவில் மீண்டும் ஓ.பி.எஸ்..? ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு பேட்டி!

அதிமுகவில் மீண்டும் ஓ.பி.எஸ்..? ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு பேட்டி!

கடன் தள்ளுபடி

இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வரவு வைக்கப்படும். வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும்.

படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை; விவசாயிகளின் கடன் தள்ளுபடி - ராகுல் காந்தி உறுதி! | Job For Every Educated Youth Rahul Gandhi Promises

ராணுவத்தில் மீண்டும் பழைய முறைப்படி ஆள்சேர்ப்பு நடைபெறும். இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் அங்கன்வாடி ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் மற்றும் 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ.400ஆக உயர்த்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.