உங்களின் ஒரு வாக்கு என்னவெல்லாம் செய்யும் - பட்டியலிட்ட ராகுல் காந்தி!

Indian National Congress Rahul Gandhi India Lok Sabha Election 2024
By Jiyath May 16, 2024 12:37 PM GMT
Report

'இந்தியா' கூட்டணிக்கான உங்கள் ஒவ்வொரு வாக்கும் வலுவான ஜனநாயகத்தை உருவாக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "உங்கள் ஒரு வாக்கின் வலிமையை புரிந்து கொள்ளுங்கள்! உங்கள் ஒரு வாக்கு, நாடு முழுவதும் நடக்கும் பயங்கரமான பாகுபாடு மற்றும் அநீதியை அகற்றும். உங்கள் ஒரு வாக்கு ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் 30 லட்சம் அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புப் பணிகளை தொடங்க வைக்கும்.

உங்களின் ஒரு வாக்கு என்னவெல்லாம் செய்யும் - பட்டியலிட்ட ராகுல் காந்தி! | Understand Power Of Your Vote Rahul Gandhi Tweet

உங்கள் ஒரு வாக்கு ஜூலை 1 முதல் ஏழைப் பெண்களின் கணக்கில் மாதம் ரூ.8,500 டெபாசிட் செய்ய வைக்கும். உங்கள் ஒரு வாக்கு உங்களுக்கு உரிமைகளை வழங்கும் அரசியலமைப்பை பாதுகாக்கும்.

இண்டியா கூட்டணி ஆட்சியமைக்கும்; பிரதமராகும் அமித் ஷா..? அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!

இண்டியா கூட்டணி ஆட்சியமைக்கும்; பிரதமராகும் அமித் ஷா..? அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!

உரிமைகளை பாதுகாக்கும்

உங்கள் ஒரு வாக்கு மூலம் உங்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தைக் காப்பாற்றும். உங்கள் ஒரு வாக்கு தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள், பங்கேற்பு மற்றும் இடஒதுக்கீட்டை பாதுகாக்கும்.

உங்களின் ஒரு வாக்கு என்னவெல்லாம் செய்யும் - பட்டியலிட்ட ராகுல் காந்தி! | Understand Power Of Your Vote Rahul Gandhi Tweet

உங்கள் ஒரு வாக்கு பழங்குடியினரின் நீர், காடு மற்றும் நிலத்தின் மீதான உரிமைகளைப் பாதுகாக்கும். 'இந்தியா' கூட்டணிக்கான உங்கள் ஒவ்வொரு வாக்கும் வலுவான ஜனநாயகத்தையும், அதிகாரம் பெற்ற குடிமக்களையும் உருவாக்கும்" என்று தெரிவித்துள்ளார்.