இடியாக வந்த செய்தி; ரீ-சார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஜியோ - புதிய ப்ளான்!

Reliance
By Sumathi Jun 28, 2024 03:26 AM GMT
Report

செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரீசார்ஜ் கட்டணம்

பிரபல தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ விளங்கி வருகிறது. இதன் வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்று வருகின்றனர்.

இடியாக வந்த செய்தி; ரீ-சார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஜியோ - புதிய ப்ளான்! | Jio Announces Tariff Hikes New Plans Details

4ஜி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு கூடுதல் சேவையாக 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இந்நிலையில், செல்போன் ரீசார்ஜ் கட்டணங்களை ஜியோ நிர்வாகம் மாற்றியுள்ளது. 12 முதல் 25 சதவீதம் வரை கட்டணம் உயர்ந்திருக்கிறது.

பகீர் கிளப்பும் ரீசார்ஜ் கட்டணம்; 25% உயர்வு - வெளியான முக்கிய தகவல்!

பகீர் கிளப்பும் ரீசார்ஜ் கட்டணம்; 25% உயர்வு - வெளியான முக்கிய தகவல்!

ஜியோ அறிவிப்பு

இந்த விலையேற்றம் வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ரூபாய் 155 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் 189 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ. 209 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் ரூ. 249 ஆகவும், ரூ. 239 கட்டணம் ரூ. 299 ஆகவும், ரூ. 349 கட்டணம் ரூ. 399 ஆகவும், ரூ. 399 கட்டணம் ரூ. 449 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

jio plan

56 நாட்களுக்கான ரூ. 479 கட்டணம் ரூ. 579 ஆகவும், ரூ. 533 கட்டணம் ரூ. 629 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 84 நாட்களுக்கான ரூ. 666 மதிப்புள்ள கட்டணம் ரூ. 799 ஆக உயர்ந்துள்ளது.

மாதம், இரு மாதம் மற்றும் ஓராண்டு திட்டங்களின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அடுத்தடுத்து செல்போன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டண அதிகரிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.