தீபாவளி சரவெடி ஆஃபர் கொடுத்த முகேஷ் அம்பானி - சென்னைக்கு 5 ஜி சேவை அறிவிப்பு
தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களுக்கு 5 ஜி சேவை வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜியோ 5ஜி சேவை
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45வது பொதுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி பேசினார்.
அப்போது பேசிய அவர், நாட்டின் வளர்ச்சிக்கு ஜியோ நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. ஜியோ வாடிக்கையாளர்கள் சராசரியாக மாதம் 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களில் ஜியோ 5 ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார்.
ஜியோ 5ஜி உலகிலேயே மிகப் பெரிய மற்றும் அதிநவீன 5 ஜி நெட்வொரக்காக இருக்கும். கடந்த ஆண்டு 2.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 5ஜி நெட்வொர்க்கை உருவாக்க ஜியோ 200 கோடி முதலீடு செய்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம் 1.88 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
5ஜி இணைய சேவை மூலம் தற்போது உள்ள 4ஜி சேவையை விட 10 மடங்கு வேகத்தில் தரவுகளை விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும்.