அதை பற்றி பேசினாலே அழுதுருவேன்; ரவிதான் வீட்டில் முதல் ஆம்பள.. ஆர்த்தி அம்மா தகவல்
ஜெயம் ரவி மாமியார் அளித்துள்ள பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
ஜெயம் ரவி - ஆர்த்தி
நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆர்த்தி ரவியின் அம்மா ஹோம் மூவி மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என தற்போது ஆர்த்தி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இந்நிலையில், ரவியின் மாமியார் முன்னதாக அளித்த பேட்டி ஒன்றில், ஜெயம் ரவிக்கும், ஆர்த்திக்கும் இடையே சண்டை நடக்காமல் இருந்ததே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். அவர்களுக்குள்ளேயேயும் நிறைய வாக்குவாதங்கள் வரும். அந்த மாதிரியான தருணங்களில், நான் ஒவ்வொரு முறையும் ரவிக்கு ஆதரவாகவே நிற்பேன்.
மாமியார் பேட்டி
காரணம், ரவி கொஞ்சம் நிதானமானவர். ஆனால் ஆர்த்தி அப்படி கிடையாது. சின்ன விஷயத்திற்கு கூட சடாரென்று டென்ஷன் ஆகி விடுவார். ரவி தான் எங்களுடைய வீட்டில் முதலில் கால் வைத்த ஆண் மகன். நான் எனக்கு பேரன் வேண்டும் என்று சொல்லி மிகவும் வேண்டி கேட்டுக் கொண்டிருந்தேன்.

அதன்படியே எங்கள் வீட்டிற்கு ஜெயம் ரவியின் மூலமாக பேரன் வந்தான். அது நிகழ்வு எங்கள் வீட்டில் பண்டிகை விட ஒரு படி மேலே சென்று மிகவும் ஒரு கொண்டாட்டமான விஷயமாக இருந்தது. ஆரவ் பற்றி பேசினாலே நான் அழ ஆரம்பித்து விடுவேன்.
அதன் பின்னரும் இன்னொரு பேரன் பிறந்தான். என்னுடைய மன அழுத்தத்திற்கு மருந்தே அவர்கள் இரண்டு பேரும் தான் எனத் தெரிவித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan