நெருக்கம், ஃபோனில் பேசினாலே பொசசிவ்; அதுதான் வருத்தமா இருக்கு - மனைவி குறித்து ஜெயம்ரவி பளீச்!
நடிகர் ஜெயம்ரவி தனது மனைவி குறித்து பகிர்ந்துள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
நடிகர் ஜெயம்ரவி
நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தன. அதன்பின் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே சைரன் படம் வெளியாகியுள்ளது.

இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது பிரதர், ஜெனி, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், தனது அண்ணன் இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.
மனைவியின் பொசசிவ்
இந்நிலையில், அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், சில நேரங்களில் பட ரிலீஸின்போது டென்ஷன் ஏற்படும். அந்த டென்ஷனிலிருந்து எனது மனைவி என்னை வெளியே கொண்டுவருவார். நான் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அவர் பார்த்துக்கொள்வார்.

பொதுவாக ஆண்கள் தங்கள் மனைவிகளிடம் பேசுவதைவிட ஆண்களிடம் அரைமணி நேரம் அதிகம் பேசுவதாகத்தான் நினைப்பார்கள். கார்த்தி எனக்கு நெருக்கமானவர். நானும் கார்த்தியும் ஃபோனில் பேசும்போது எனது மனைவி என்னிடம், நீ ஏன் என்னிடம் இவ்வளவு நேரம் பேசவில்லை என கேட்பார்.
அந்த அளவுக்கு அவருக்கு பொசசிவ் இருக்கும். ஏதாவது படத்தை பற்றி சொன்னால் அதை பற்றியெல்லாம் எனக்கு தெரியாது என்பார். எனக்கு பெண் குழந்தை இல்லாதது வருத்தமாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan