மனைவி ஆர்த்தியை பிரிய இதுதான் காரணம் - நடிகர் ஜெயம்ரவி விளக்கம்
மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.
ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ஆர்த்தி ரவியின் அம்மா ஹோம் மூவி மேக்கர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். சமீப காலமாக ஜெயம் ரவி தனது மனைவியை பிரியப் போவதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.
விவாகரத்து
இந்நிலையில், மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நீண்டகால யோசனை மற்றும் பரிசீலனைக்கு பிறகே ஆர்த்தியை பிரிய முடிவு எடுத்துள்ளேன்.
ஆர்த்தியை பிரியும் முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. தன்னை சார்ந்தவர்கள் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.