என் பையன் ராஜா மாதிரி தான் இருந்தான் - ஜெயம்ரவி அப்பா சொன்ன அதிர்ச்சி தகவல்!

Jayam Ravi Tamil Cinema Divorce
By Vidhya Senthil Sep 28, 2024 07:32 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

  ஜெயம் ரவி 12 வயதில் ஒரு அரங்கேற்றம் செய்ததாக அவரது தந்தை மோகன் ராஜா பேசியுள்ளார்.

 ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, ஜெயம், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, பேராண்மை, பூலோகம், தனி ஒருவன் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

jayam ravi

இந்த சூழலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி நடிகர் ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் காதல் திருமணம் நடந்தது .இவர்களுக்கு அயன் மற்றும் ஆரவ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விட்டுப் பிரிவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்க்கு மறுப்பு தெரிவித்த ஆர்த்தி ,ஜெயம் ரவி தன்னை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வெடுத்த முடிவு . இதில் குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல” என்று ஆர்த்தி கூறிஇருந்தார்.

விவாகரத்தை அறிவித்த நடிகர் ஜெயம் ரவி - அதிர்ச்சியில் ரசிகர்கள்

விவாகரத்தை அறிவித்த நடிகர் ஜெயம் ரவி - அதிர்ச்சியில் ரசிகர்கள்

அதுமட்டுமில்லாது நடிகர் ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியைப் பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

மோகன் ராஜா

இதற்கு, கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்தார். இந்த சூழலில் நேர்காணலில், தன்னுடைய மகன் ஜெயம் ரவி குறித்து மோகன் ராஜா பேசியிருக்கிறார். அதில் ரவி பிறந்த பிறகுதான் என்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்தது.

mohanraja

ஜெயம் ரவிக்கு 6 வயது இருக்கும் போதே பரதநாட்டியம்  சேர்த்து விட்டேன். 12 வயதில் ஒரு அரங்கேற்றம் செய்தார்.அப்போது கவிஞர் வைரமுத்து தலைமையில் நடந்த அந்த நிகழ்ச்சியில் ரவியைப் பார்த்து ஒரு நடிகனை தயாரித்து வைத்திருக்கிறார் என்று சொன்னார்.

அதன்பிறகு 12 வயதில் பரதநாட்டியம் கிளாசை நிறுத்திவிட்டேன். காரணம் அதற்குப் பிறகு பரதநாட்டியத்தைத் தொடங்கினால் நடை மாறி விடும் என்று நினைத்தேன்.

ஆனால் அப்போது கனல்கன்னன் உட்படப் பலர் என்னிடம் இருந்ததால் அவர்களிடமிருந்து தான் குதிரை ஏற்றம், பைட் எல்லாம் ஜெயம் ரவி கற்றுக் கொண்டு ராஜா மாதிரி இருந்தார் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.