பாடகியுடன் தொடர்பா? ஆர்த்திக்கு முன்பே தெரியும் - விளக்கமளித்த ஜெயம் ரவி!

Jayam Ravi Divorce Aarti Ravi
By Sumathi Sep 21, 2024 04:42 AM GMT
Report

விவாகரத்து தொடர்பாக ஜெயம் ரவி முதன்முறையாக விளக்கமளித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

jayam ravi - aarti ravi

இந்நிலையில், மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆனால் இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என தற்போது ஆர்த்தி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இதற்கிடையில், ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷா பிரான்சிசுக்கும் பழக்கம் இருப்பதாக செய்திகள் பரவியது. இந்நிலையில், முதல்முறையாக இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஜெயம் ரவி,

அவர் என் கூடதான் இருக்கார்; வெளி உலகம் தெரிந்தது - மனம் திறந்த நடிகை மீனா!

அவர் என் கூடதான் இருக்கார்; வெளி உலகம் தெரிந்தது - மனம் திறந்த நடிகை மீனா!

விவாகரத்து 

'நான் எடுத்த விவாகரத்து முடிவு அவருக்கு தெரியாது என்பதில் எந்த லாஜிக்கும் இல்லை. அவருக்கு ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அவர்கள் தரப்பில் பேசியும் இருக்கிறார்கள். இப்படி இருந்தும் தனக்கு தெரியாது என்று அவர் கூறுவது ஆச்சரியமாக உள்ளது.

பாடகியுடன் தொடர்பா? ஆர்த்திக்கு முன்பே தெரியும் - விளக்கமளித்த ஜெயம் ரவி! | Jayam Ravi About His Divorce Controversy

மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன். சட்டரீதியாக செல்கிறேன். பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது, பேசியவர்களுக்குத்தான் அசிங்கம். அவர் ஒரு சைக்காலஜிஸ்ட். மன அழுத்தத்தில் இருந்த எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார்.

அவரோடு ஒரு ஆன்மிக மையம் ஆரம்பிக்க முடிவு செய்ததை தகர்ப்பதற்காக இப்படி பேசுகின்றனரா என்று தெரியவில்லை. அப்படி பேசுவது மிகவும் தவறு. நான் சட்டத்தை நம்புகிறேன். நியாயம் கிடைக்கும்.’ எனத் தெரிவித்துள்ளார்.