ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள் - தமிழக அரசிடம் ஒப்படைப்பு!
ஜெயலலிதாவின் சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா சொத்துக்கள்
1991-96ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து 27 கிலோ தங்க நகைகள், 1000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின், ஜெயலலிதாவின் நகைகள், அசையா சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று
அரசிடம் ஒப்படைப்பு
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் பொருட்கள் அனைத்தும் தமிழக அதிகாரிகள் முன்னிலையில் முறையாக ஆய்வு செய்யப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஒப்படைக்கப்பட்ட நகைகள் அனைத்தும், தமிழக அதிகாரிகள் கொண்டு வந்த பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டது.