சரத்பாபுவை தான் திருமணம் செய்ய நினைத்தேன் - ஜெயலலிதா சொன்ன தகவல்!
சரத்பாபுவை திருமணம் செய்ய நினைத்ததாக தெலுங்கு நடிகை ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நடிகை ஜெயலலிதா
கமல்ஹாசன் நடித்து தெலுங்கில் வந்த 'இந்துருடு சந்துருடு' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஜெயலலிதா. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.
விஜயகாந்த் நடித்த 'பெரிய மருது', அஜித் நடித்த 'அவள் வருவாளா' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் சரத்பாபுவைக் காதலித்தேன். அவரது வாழ்க்கையின் கடைசி காலத்தில் நான் அவருடன் இருந்தேன்.
சரத்பாபுவுடன் உறவு
நான் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன், அவர் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளவும் விரும்பினேன். இருந்தாலும் திரையுலகத்தில் செல்வாக்கு மிக்க சிலர் எங்களது திருமணம் நடைபெறவிடாமல் தடுத்தனர். நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள நினைத்திருந்தோம்.
எங்களது ஆசை நிறைவேறுவதற்கு முன்பாகவே அவரது வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் மறைந்த நடிகர் சரத்பாபு. நடிகை ரமா பிரபாவுடன் 14 ஆண்டுகள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
அவரைப் பிரிந்த பின் நம்பியாரின் மகள் சினேகா நம்பியாரைத் திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களுக்குப் பின் அவர்களும் பிரிந்தனர்.
தற்போது சரத்பாபுவுடன் தான் ஒன்றாக வசித்தது பற்றி ஜெயலலிதா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.