நடிகர் சரத்பாபு உயிரிழப்பு காரணம் இது தான் - நடிகை சுஹாசினி பரபரப்பு தகவல்...!
நடிகர் சரத்பாபு உயிரிழப்பு குறித்த பரபரப்பு தகவல் ஒன்றை நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.
திரைத்துறையினர் இரங்கல்
நடிகர் சரத்பாபு நேற்று பிற்பகல் உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் காலமானார். இதையடுத்து அவரது உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், சூர்யா, சரத்குமார், சுஹாசினி உள்ளிட்ட தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
உயிரிழப்புக்கு காரணம் என்ன?
அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த 92 நாட்களாக சரத்பாபு மருத்துவமனையில் இருந்தார். இதில் முதல் இரண்டு மாதங்கள் பெங்களூருவில் இருந்தார்.
முதலில் காய்ச்சல் வந்ததால் அவரது உறவினர்கள் பெங்களூருவில் இருப்பதால் அங்கு சென்றார். அங்கு போனதும் இவருக்கு என்ன பிரச்சினை என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்புதான், அவருக்கு மல்டிபிள் மைலோமோ (எலும்பு மஜ்ஜையின் பிளாஸ்மா செல்களில் உருவாகும் புற்றுநோய்) இருப்பது தெரிய வந்தது.
பெங்களூருவில் மருத்துவர்களிடம் நானும், சிரஞ்சீவியும் பேசினோம். முடிந்த அளவு நாங்கள் காப்பாற்ற முயற்சிக்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால், அவர் நேற்று மதியம் 1.30 மணிக்கு காலமானார்.
அவருக்கு எந்தவிதமான கெட்டப் பழக்கமும் இல்லை. இந்த மல்டிபிள் மைலோமா நான்காவது கட்டத்தில்தான் மருத்துவர்களுக்கே தெரிய வந்தது. அதனால், அனைவரும் அவ்வப்போது மருத்துவர்களிடம் உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என்றார்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
