END கார்டு போட்ட விஜய்..ஆட்டத்தை தொடங்கிய சஞ்சய்- வெளியான மாஸ் அப்டேட்!

Vijay Tamil Cinema Star Movie
By Vidhya Senthil Sep 09, 2024 08:34 AM GMT
Report

 ஜேசன் சஞ்சய் இயக்கும் படம் குறித்து தற்பொழுது புதிய தகவல் வெளியாகியுள்ளது.  

 ஜேசன் சஞ்சய் 

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் .இவர் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இவர் இயக்கும் படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

vijay

இது குறித்து இது தொடர்பாக லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜேசன் சஞ்சயை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளது.

பிரச்சனையே அதனால தான்; அவன நம்பவே முடியாது - தனது மகன் குறித்து நடிகர் விஜய்!

பிரச்சனையே அதனால தான்; அவன நம்பவே முடியாது - தனது மகன் குறித்து நடிகர் விஜய்!

மேலும், ஜேசன் சஞ்சயுடன் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திட்டது தொடர்பான புகைப்படங்களையும் அந்நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது. இந்த நிலையில் படப்பிடிப்பு பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இதற்காக முன்பணிகளில் சஞ்சய் ஈடுபட்டு வருகிறார்.

புதிய தகவல்

இந்த நிலையில் இப்படத்தில் முன்னணி நடிகரான சந்தீப் கிஷன் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வாரணம் ஆயிரம் திரைப்படத்தில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அவர் தமிழில் மாயவன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

sanjay

இதனையடுத்து கண்ணாடி,மைக்கேல்,மாநகரம்,நரகாசூரன்,கேப்டன் மில்லர்,உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் தற்பொழுது ராயன் திரைப்படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்தும் அதில் வரும் வாட்டர் பாக்கெட் பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.