TVK கொடியை அறிமுகம் செய்யும் விஜய்..எப்போது தெரியுமா?
வரும் 22ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்
நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார் .2026 சட்டமன்ற தேர்தலில் போட்டிட்டு வெற்றி பெற்று அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதே நமது இலக்கு எனத் தெரிவித்து இருந்தார்.
மேலும், விஜய் தனது 68 -வது படமான கோட் படத்தில் நடித்துவிட்டு 69 -வது படத்தையும் முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் வட்டாரத்தில் கூறப்பட்டது.இதனையடுத்து தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்த திட்டமிட்டதாக தகவல் வெளியான நிலையில்,
தற்போது விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த நிலையில் வரும் 22ஆம் தேதி, தமிழக வெற்றி கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியில் உள்ள நிறங்கள், மற்றும் வாகை மலர் இடம்பெறுவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாகை மலர் எதற்காக ?
வாகை என்றால் வெற்றி என அர்த்தம் .விஜய் என்றால் வெற்றி என்ற அடிப்படையில் தனது கட்சியின் பெயரில் உள்ள வெற்றியை வாகை மலரால் குறிக்கும் வகையில் வாகை மலர் தமிழக வெற்றிக் கழக கொடியில் இடம் பெறுவதாக தகவல் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பண்டைய காலங்களில் போரில் வெற்றி பெரும் மன்னர்களுக்கு வாகை மலர் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.