சிம்பிளாக நடந்த இரண்டாம் திருமணம் - நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம் வைரல்!
நடிகர் விஜய்யின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இதுவரை 67 படங்களில் அவர் நடித்து முடித்து விட்டார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார். நடிகர் விஜய் இந்தளவிற்கு உயர்ந்ததில் அவரின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் முக்கிய பங்குண்டு. எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த 1973-ம் ஆண்டு இந்து முறைப்படி ஷோபாவை திருமணம் செய்துகொண்டார்.
திருமணம்
இந்த தம்பதிக்கு கடந்த 1974-ம் ஆண்டு நடிகர் விஜய் மகனாக பிறந்தார். எஸ்.ஏ. சந்திரசேகர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் ஆவார். எனவே, இந்து முறைப்படி திருமணம் நடந்துமுடிந்த பின் மீண்டும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஷோபா தனது கணவர் எஸ்.ஏ.சியிடம் கூறியுள்ளார்.
இதனால் நடிகர் விஜய்க்கு 6 வயதாக இருக்கும்போது எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா தம்பதியினர் கிறிஸ்துவ முறைப்படி இரண்டாவது திருமணம் செய்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.