மகன் சஞ்சய் உடன் விரிசலில் விஜய்; ஒரே வீட்டில் இல்லையா? பிரபல நடிகர் முற்றுப்புள்ளி!
விஜய் மற்றும் அவரது மகன் குறித்த தகவலை நடிகர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.
சஞ்சய்-விஜய்
நடிகர் விஜயின் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சாதனை செய்துள்ளது. தற்போது வெங்கட் பிரபுவுடன் தளபதி 68 படத்திற்காக கூட்டணி அமைத்து நடித்து வருகிறார்.

தொடர்ந்து, விஜய் அரசியலிலும் ஈடுபடவுள்ளதாகவும் வரும் சட்டமன்ற தேர்தலில் இவரது பங்களிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பல நடவடிக்கைகளில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.
பரவும் வதந்தி
இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய்யும் தற்போது சினிமாவில் களமிறங்கியுள்ளார். சில குறும்படங்களையும் இயக்கியுள்ள சஞ்சய், தற்போது லைகா தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

அதன்பின் பட பூஜையும் விஜய் கலந்துக்கொள்ளாமல் நடைபெற்றது. இதனால் தந்தை - மகனுக்கு இடையில் விரிசலா என கேள்விகள் ரசிகர்களை சூழ்ந்தது. இந்நிலையில், பிரபல நடிகர் சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர், மகன் சஞ்சய் விஜய் வீட்டில் இருக்கிறாரா? அல்லது வெவ்வேறு வீட்டில் இருக்கிறார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அவர், உங்களுக்கு எதில் சந்தேகம் வரும் என்ற அளவே கிடையாதா? விஜய், மகன் சஞ்சய் இருவரும் ஒரே வீட்டில் தான் வசித்துக்கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil