உலகப் புகழ் நிர்வாண திருவிழா; இனி நடக்காது - மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த காரணம்!
நிர்வாண திருவிழா விரைவில் முடிவுக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நிர்வாண திருவிழா
வடக்கு ஜப்பானின் இவாட் பகுதியில் உள்ள கோகுசேகி கோயிலில் உள்ள காட்டில் நிர்வாண திருவிழா நடக்கும். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வினோதமான பழக்க வழக்கங்கள் இருக்கும்.
அந்த வரிசையில் இதுவும் ஒன்று. இந்த திருவிழாவில் ஒரே இடத்தில் பல ஆயிரம் ஆண்கள் நிர்வாணமாக ஒன்று கூடுவார்கள். கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்த பாரம்பரிய சடங்கு நடந்து வருகிறதாம். இதில், தாலிஸ்மன்கள் எனப்படும் பையில் மல்யுத்தம் செய்து கொள்வார்கள்.
முடிவுக்கு வரும் சடங்கு
மேலும், சண்டையிடும் போது "தீமை, போய்விடு" என்று கோஷமிடுவார்கள். இந்த விழாவைப் பார்க்க உலகின் பல நாடுகளில் இருந்து மக்கள் ஒன்றுகூடுவார்கள். தற்போது, இந்த சடங்கை முடிவுக்கு கொண்டு வர அந்த கோயில் தேவஸ்தானம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து கோயில் துறவி பேசுகையில்,
"இவ்வளவு பெரிய திருவிழாவை ஏற்பாடு செய்வது மிகவும் கடினம். இங்கே பல ஆயிரம் பேர் கூடியிருக்கிறார்கள், எல்லாம் உற்சாகமாக இருக்கிறது. ஆனால் திரைக்குப் பின்னால், பல சடங்குகள் மற்றும் நிறைய வேலைகள் செய்ய வேண்டும். அதைச் செய்ய ஆட்கள் இருப்பதில்லை. இதுவே மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.