நிர்வாண பார்ட்டி - சொகுசு கப்பலுக்கு படையெடுக்கும் ஜோடிகள்!
சொகுசு கப்பலில் நிர்வாண பார்ட்டிகள் நடப்பதால் ஜோடிகள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிர்வாண பார்ட்டி
இத்தாலியின் குரூசோ சொகுசு கப்பல் பிரபலமடைந்துள்ளது. அங்கு நிர்வாண பார்ட்டிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில், பங்கு பெற ஜோடிகளுக்கு தனியாகவும், சிங்கிளாக வருவோருக்கு தனியாகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும், யாருக்கும் தெரியாத வண்ணமும், இத்தகைய செயல்கள் மீது சந்தேகம் வராத வகையிலும் பார்த்துக் கொள்கின்றனர். இதனை ஏற்பாடு செய்யும் ஜான் காமௌ, ''கொரோனா ஊரடங்குக்கு பிறகு இந்த மாதிரியான பார்ட்டிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
ஜோடிகள் ஆர்வம்
இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளலாம். அங்கே ஆடை அனுமதி இல்லை. இந்த மாதிரியான பார்ட்டிகளுக்கு ஜோடியாக வருபவர்களே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
70 சதவிகிதம் பேர் ஜோடியாக கலந்துகொள்கிறார்கள். இந்த மாதிரியான பார்ட்டிகளுக்கு பிறகு ஜோடியாக வருவபவர்களுக்கு இடையே நிலவும் உறவு வலுவடையும். சலிப்பான அவர்களின் வாழ்க்கையில் இத்தகைய பார்ட்டிகள் சுவாரசியம் சேர்க்கும் எனத் தெரிவித்துள்ளார்.