குடித்து விட்டு குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை - விளாசும் ரசிகர்கள்!
ரைசா வில்சன் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் ஆவேசமடைந்துள்ளனர்.
ரைசா வில்சன்
விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரைசா வில்சன். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கதாநாயகியாக ஹரிஷ் கல்யானுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் அறிமுகமானார். அதனையடுத்து, வர்மா, எஃப்.ஐ.ஆர், காஃபி வித் காதல், பொய்க்கால் குதிரை போன்ற படத்தில் நடித்தார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
குடித்து விட்டு ஆட்டம்
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ரைசா, அடிக்கடி தனது போட்டோசூட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பார்ட்டியில் அரைகுறை ஆடையில் குடித்துவிட்டு ஆடிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்தனர். கடைசியில் காஃபி வித் காதல் படத்தின் பார்ட்டி பாடலில் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட வீடியோ என தெரியவந்தது.
தற்போது, தி சேஸ், ஆலிஸ், கருங்காப்பியம், லவ், காதலிக்க யாருமில்லை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.