நித்தியானந்தா சீடராக மாறிய பிரபல பிக்பாஸ் நடிகை? புதுகோலத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் - ஷாக்கான ரசிகர்கள்
விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரைசா வில்சன்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ஓவியா எப்படி முதல் சீசனில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக மாறினாரோ, அதே போல தான் ஓவியாவிற்கு பின்னர் அதிக ரசிகர்களை பெற்றவர் இவர்தான்.
இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷின் விஐபி-2 படத்தில் நடித்து இருந்தவர் தான் ரைசா. அதன் பிறகு, பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு கதாநாயகியாக ஹரிஷ் கல்யானுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் அறிமுகமானார்.
பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் நடிகை ரைசா. இந்நிலையில், சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ரைசா, அடிகடி தனது போட்டோசூட் புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
தற்போது, சன்யாசி உடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை நடிகை ரைசா வெளியிட்டுள்ளார். அதில் ஹெலோ ரைசாநந்தா என்று கமன்ட் செய்திருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் நித்யாநந்தா சீடராக மாறிவிடீர்களா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.