கல் எறியும் திருவிழாவாம் - எப்படியெல்லாம் கொண்டாடுராங்க பாருங்க! எங்கே?
திருவிழாவில், ஊர் மக்கள் சேர்ந்து ஒருவர் மீதி ஒருவர் கல் எறிந்து கொண்டாடுகின்றனர்.
கல் எறி திருவிழா
மத்தியப் பிரதேசம், சிந்த்வாரா மாவட்டத்தில் 'கோட்மர்' எனப்படும் கல் எறியும் பாரம்பரிய திருவிழா ஏறக்குறைய 300 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் போது, ஜாம் ஆற்றின் இருபுறமும் சாவர்கான் மற்றும் பந்துார்னா கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு,
மறுபுறம் கற்களை வீசுவர். அதில், ஆற்றின் நடுவில் உள்ள ஒரு மரத்தில் ஏற்றப்பட்டிருக்கும் கொடியைப் பறிக்க போட்டி நடைபெறும். கடந்த ஆண்டுகளாக நடந்த இந்த விழாவில், பலர் உயிரிழந்துள்ளனர்.
144 தடை
மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இங்கு கல் எறியும் விழா துவங்கியது. இதனையொட்டி, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக மருத்துவர்களும், போலீசாரும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
நிலைமையை கண்காணிக்க, ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்படுகின்றன என போலீசார் தெரிவித்தனர். பதுர்னா கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன், ஸ்வராகான் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை கடத்தி வந்துவிட்டார்.
இதான் காரணமாம்..
இரு கிராமத்துக்கு இடையே இருக்கும் ஆற்றை இருவரும் கடக்கும்போது, ஸ்வராகான் மக்கள் கல் எறிந்து அவர்களை செல்லவிடாமல் தடுத்தனர். அப்போது பதுர்னா கிராம மக்கள் வந்து சிறுமியையும், சிறுவனையும் மீட்டு காப்பாற்றினர்.
இதன் நினைவாக இரு கிராமத்தினரும் கல்லெறிந்து கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.