150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் 'மெகா பூகம்பம்' - விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்!

Japan Earthquake World
By Vidhya Senthil Aug 09, 2024 06:35 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in உலகம்
Report

  ஜப்பானிய கடற்கரையில் 8-9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பான்

ஜப்பானின் தெற்கு பகுதி தீவான Kyushu-வில் வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது . அதைத் தொடர்ந்து ஜப்பானின் கடலோரப் பகுதிகளான மியாசாகி, கொச்சி, இஹிம், ககோஷிமா மற்றும் அய்டா ஆகிய பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும்

இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் பசிபிக் கடற்கரையின் Nankai Trough-வின் மையப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. இப்போது ஜப்பான் வானிலை ஆய்வு மையம் (ஜேஎம்ஏ) முதன் முறையாக மெகா பூகம்ப எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

1,700 ஆண்டுகள் பழமையான முட்டை - உள்ளே இருந்ததை கண்டு அதிர்ந்த விஞ்ஞானிகள்!

1,700 ஆண்டுகள் பழமையான முட்டை - உள்ளே இருந்ததை கண்டு அதிர்ந்த விஞ்ஞானிகள்!

 நிலநடுக்கம்

ஜப்பான் கடற்கரையில் 8-9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக் கூடிய சூழ்நிலைக்கு மக்கள் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதே போல் ஜப்பானில் 8.0 மற்றும் 9.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட 70 முதல் 80% வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும்

இந்த நிலநடுக்கம் பொதுவாக 100 முதல் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழக்கூடியவை ஆகும் . முன்னதாக இது போன்ற நிலநடுக்கம் டிசம்பர் 1946 இல் ஏற்பட்டது. சுமார் 8.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்காத்தால் 1300 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் .36,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.