நாயாக இருந்தது போதும் - இப்போ எனக்கு நரியாக மாறணும்!! வினோத முயற்சிகளில் ஜப்பான் மனிதர்!!

Japan
By Karthick May 26, 2024 03:06 PM GMT
Karthick

Karthick

in உலகம்
Report

தான் நான்கு விலங்குகளாக மாறவேண்டும் என கூறும் அவர், அவற்றில் இரண்டில் logical problem இருப்பதால் அவை வேலை செய்யாமல் போகலாம் என்றும் தெரிவிக்கிறார்.

நாயாக மாறியவர் 

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னை நாயாக மாற்ற சுமார் ரூ. 12 லட்சம் செலவழித்துள்ளார் என்றால் உங்கலால் நம்ப முடிகிறதா? அவருக்கு தற்போது மற்றுமொரு வினோத ஆசையும் வந்துள்ளது. நாயாக இருக்கும் அவர், தற்போது பாண்டா அல்லது நரியாக மாற விரும்புவதாக கூறியும் இருக்கிறார்.

japan man who turned dog now wants to be fox

டோகோ என்ற அந்நபர் தனது யூடியூப் சேனலான 'I want to be an animal' லில் நாயாக மாறிய தனது முழு பயணத்தையும் விவரித்துள்ளார். நாயைப் போல ஆராயவும் வேண்டும் என்ற தனது சிறுவயது கனவை நிறைவேற்ற விரும்புவதாக அவர் பேசுகிறார். சமீபத்தில், ஒரு ஜப்பானிய செய்தி நிறுவனத்திடம் பேசிய டோகோ, தற்போது தான் ஒரு புதிய விலங்காக வாழ்க்கையை வாழ விரும்புவதாகக் கூறினார்.

japan man who turned dog now wants to be fox

அவர் நான்கு விலங்குகளாக மாற முயற்சி செய்யவதாக கூறி, ஆனால், அவற்றில் இரண்டு சாத்தியமற்றதாக இருக்கலாம் என்கிறார். WanQol என்ற ஜப்பானிய செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், ''நாய்களுக்கும் மனிதர்களுக்கும் வெவ்வேறு எலும்பு அமைப்புகளும், கால்கள் மற்றும் கைகளை வளைக்கும் விதமும் உள்ளன என குறிப்பிட்டு எனவே இது போன்ற தோற்றத்தை உருவாக்குவது மிகவும் கடினம் என சுட்டிக்காட்டினார்.

ட்விட்டர் லோகோ வரை உயர்ந்த புகழ் - வைரல் நாய் doge மரணம்!!

ட்விட்டர் லோகோ வரை உயர்ந்த புகழ் - வைரல் நாய் doge மரணம்!!

நரியாகணும் 

தற்போது என் கைகால்களை நாய்களைப் போல் மாற்றுவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறேன். நான் மற்றொரு விலங்கு ஆக விரும்புகிறேன், ஒரு பாண்டா, அல்லது ஒரு கரடி கூட நன்றாக இருக்கும்.

japan man who turned dog now wants to be fox

இதுவரை தனது இயற்பெயரை வெளியிட மறுத்தவர், நாய் நடைப்பயணத்திற்குச் செல்வது, நாய் உணவை உண்பது, புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வது போன்ற கிளிப்களை தனது சேனலில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.தனது யூடியூப் சேனலில் பலரும் தன்னை போலவே மாற நினைப்பதாக என்றும் அவர் குறிப்பிட்டார்.