ட்விட்டர் லோகோ வரை உயர்ந்த புகழ் - வைரல் நாய் doge மரணம்!!
மீம்ஸ்களில் மிகவும் பிரபலமாக இருந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த நாய் மரணமடைந்துள்ளது.
ஷிபா இனு கபோசு என இந்த நாய் மீம்ஸ்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகவே இருந்துள்ளது. டோகி(Doge) என சமூகவலைத்தளங்களில் குறிப்பிடப்படும் இவர், நேற்று மே 24 காலை 7:50 மணிக்கு இயற்கை எய்தியுள்ளார்.
இது தொடர்பான செய்தியை சமூகவலைத்தளத்தில் அவரின் உரிமையாளர் பகிர, ரசிகர்களை அதிர்ச்சியடைந்து மட்டுமின்றி தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த 2010-ஆம் ஆண்டு சமூகஊடங்களில் அறிமுகமான Doge மெல்ல மெல்ல ரசிகர்களை ஈர்க்க துவங்கினார். Doge'வின் புகழின் அடிப்படையில் 2013-ஆம் ஆண்டு கிரிப்டோ நிறுவனம் ஒன்றும் துவங்கப்பட்டு, அதற்கு Dogecoin என்றும் பெயரிடப்பட்டு, அதன் லோகோவாக Doge இடம் பெற்றது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எலான் மஸ்க் ட்விட்டரின் லோகோவாகவும் Doge புகழின் உச்சிக்கு சென்றது. இன்டர்நெட் உலகை ஆட்சி செய்த doge தனது 17 வயதில் இயற்கை எய்திய சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.