இனி நாய்களுக்கும் ஆதார் கார்டு - டெல்லியில் அதிரடியாக நடைமுறைக்கு வந்தது!!
ஆதார் கார்டு
ஒரு முக்கிய முயற்சியாக, 100 தெருநாய்களுக்கு QR அடிப்படையிலான "ஆதார் அட்டை"கள் இன்று(ஏப்ரல் 27, 2024) டெல்லியின் பல இடங்களில் வழங்கப்பட்டுள்ளது. பிரபலமான இந்தியா கேட், விமான நிலையம் போன்ற இடங்களில் NGO-வான Pawfriend.in வழங்கியுள்ளது.
இந்த Pawfriend.in NGO'வின் டெல்லி தலைவரான பிரியா சோப்ரா தலைமையில் இது தெரு நாய்களின் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், தெருவில் சுற்றி திரியும் நாய்கள் தொலைந்து போவதைத் தடுப்பதற்கும் இது ஒரு முக்கியமான படியாக இருக்கும் என கூறப்படுகிறது.
QR code..
தெருநாய்களின் பாதிப்பை உணர்ந்து, விமான நிலையத்தில் 15 நாய்களும், இந்தியா கேட்டில் 25 நாய்களும் இந்த QR code வழங்கப்பட்டுள்ளன. இந்த QR-அடிப்படையிலான 'ஆதார் கார்டுகளில்' நாய்களுக்கு உணவு வழங்கும் விவரங்களும், அவசரகால தொடர்பு எண்களும் இடமபெற்றுள்ளன.
திடீரென நாய்கள் தொலைந்துபோனாலும் , அவற்றை பராமரிப்பாளர்களுடன் மீண்டும் இணைக்கும் வகையில் இது உதவும் என இந்த முன்னெடுப்பை எடுத்த தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.