நாய் பிஸ்கட்டை தொண்டருக்கு அளித்த ராகுல் காந்தி..! வீடியோவால் வெடித்த சர்ச்சை..!
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தொண்டருக்கு நாய் பிஸ்கட் கொடுத்தார் என்ற வீடியோ ஒன்று தற்போது வெளியாகியிருக்கின்றது.
ராகுல் காந்தி வீடியோ
இது குறித்து பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவரான அமித் மாளவியா வெளியிட்டுள்ள பதிவில், சில நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் கார்கே ஜி கட்சியின் பூத் ஏஜெண்டுகளை நாய்களுடன் ஒப்பிட்டார்.
இங்கே ராகுல் காந்தி தனது வருகையின் போது நாய்க்கு பிஸ்கட் ஊட்டுகிறார், மேலும் நாய் சாப்பிடாதபோது அதே பிஸ்கட்டை தனது தொழிலாளிக்கு வழங்கினார்.
ஒரு கட்சியின் தலைவரும் பட்டத்து இளவரசரும் கட்சிக்காரர்களை நாய்களைப் போல் நடத்தினால், அத்தகைய கட்சி காணாமல் போவது இயற்கையானது என பதிவிட்டுள்ளார்.
உண்மையில் ராகுல் காந்தி அளித்த பிஸ்கட் என்ன என்பது தெரியாத நிலையிலும் பலரும் இதனை வைத்து தங்களது கருத்துக்களை பதிவிட துவங்கிவிட்டனர்.
अभी कुछ दिन पहले कांग्रेस अध्यक्ष खड़गे जी ने पार्टी के बूथ एजेंटों की तुलना कुत्तों से की और यहाँ राहुल गांधी अपनी यात्रा में एक कुत्ते को बिस्किट खिला रहे हैं और जब कुत्ते ने नहीं खाया तो वही बिस्किट उन्होंने अपने कार्यकर्ता को दे दिया।
— Amit Malviya (@amitmalviya) February 5, 2024
जिस पार्टी का अध्यक्ष और युवराज अपने… pic.twitter.com/70Mn2TEHrx