ஜார்க்கண்ட் அரசை கவிழ்க்க முயன்ற பாஜகவின் சதியை இந்தியா கூட்டணி முறியடித்தது - ராகுல் காந்தி!

Indian National Congress Rahul Gandhi India Jharkhand
By Jiyath Feb 03, 2024 04:42 AM GMT
Report

பாஜகவின் சதியை 'இந்தியா' கூட்டணி எதிர்த்து நின்று முறியடித்தது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

ராகுல் காந்தி

ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த சோரன், நிலக்கரி சுரங்க முறைகேடு, நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

ஜார்க்கண்ட் அரசை கவிழ்க்க முயன்ற பாஜகவின் சதியை இந்தியா கூட்டணி முறியடித்தது - ராகுல் காந்தி! | India Alliance Stopped Bjps Attempt To Topple

இதனையடுத்து ஜார்கண்ட் முதலமைச்சராக சம்பாய் சோரன் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜார்க்கண்ட் மாநிலத்திற்குள் நுழைந்த நிலையில், அவரை புதிய முதலமைச்சர் சம்பாய் சோரன் வரவேற்றார்.

சதியை முறியடித்தது

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி "ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பா.ஜ.க. சீர்குலைக்க முயன்றது .

ஜார்க்கண்ட் அரசை கவிழ்க்க முயன்ற பாஜகவின் சதியை இந்தியா கூட்டணி முறியடித்தது - ராகுல் காந்தி! | India Alliance Stopped Bjps Attempt To Topple

ஆனால் 'இந்தியா' கூட்டணி எதிர்த்து நின்று பா.ஜ.க.வின் சதியை முறியடித்தது. பணபலம் மற்றும் விசாரணை அமைப்புகளை பா.ஜ.க. தன்வசம் வைத்திருந்தாலும், அதைக் கண்டு காங்கிரஸ் கட்சி அஞ்சப்போவது இல்லை" என்று தெரிவித்துள்ளார்.