கல்யாண புடவை மட்டுமே ரூ.17 கோடி; நெக்லஸ் ரூ.25 கோடி - இந்தியாவில் பிரம்மாண்ட திருமணம்!
அதிக செலவுமிக்க திருமணம் ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது.
பிரம்மாண்ட திருமணம்
கர்நாடகா, சுரங்க தொழிலதிபரும், கர்நாடக முன்னாள் அமைச்சருமான ஜி. ஜனார்த்தன ரெட்டியின் மகளான பிராமணி ரெட்டிக்கும் - ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விக்ரம் தேவ ரெட்டியின் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் திருமணம் நடந்துள்ளது.
இவர்களது திருமணம் 2016லேயே நடந்திருந்தாலும், ரூ.500 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. 5 நாட்களாக நடந்த திருமனத்தில், 17 கோடி ரூபாய் செலவில் மணமகள் புடவை அணிந்திருந்தார். அந்த ஆடை வடிவமைப்பாளர் நீதா லுல்லா.
ரூ.500 கோடி செலவு
அவரது நெக்லஸின் விலை ரூ. 25 கோடி. ஒட்டுமொத்த மணப்பெண் நகைகள் ரூ.90 கோடி மதிப்புடையவை. மேக்கப் செலவு மட்டும் 30 லட்சம் ரூபாய். 50க்கும் மேற்பட்ட மேக்கப் கலைஞர்கள் மும்பையில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் தங்குவதற்கு வசதியாக பெங்களூரில் உள்ள ஐந்து மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் 1,500 அறைகளை முன்பதிவு செய்திருந்துள்ளனர்.
விருந்தினர்களை ஏற்றிச் செல்ல சுமார் 2000 கார்கள் மற்றும் 15 ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன. திருமண அழைப்பிதழ்கள் மட்டும் ரூ. 5 கோடிக்கு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.