10 ஆண்டுகளுக்கு பின் ஜம்மு காஷ்மீர் தேர்தல் - மும்முனைப்போட்டியில் யாருக்கு வெற்றி?
ஜம்மு - காஷ்மீரின் ஏழு மாவட்டங்களில் உள்ள 24 சட்டசபை தொகுதிகளில் ஓட்டுப்பதிவு தொடங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த போது 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது.
அதன்பின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டசபை தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது. மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
மும்முனை போட்டி
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இன்று 24 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
களத்தில் பாஜக, காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி, மக்கள் ஜனநாயகக் கட்சி, பொறியாளர் ரஷீத் எம்பியின் அவாமி இதிஹா கட்சி- ஜமாத் இ இஸ்லாமி கூட்டணி, ஆம் ஆத்மி உள்ளிட்டவை களத்தில் உள்ளன. மும்முனை போட்டி நிலவுகிறது.
மும்முனை போட்டி நிலவுகிறது.
90 சுயேச்சைகள் உட்பட 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம், 23.27 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.
10 ஆண்டுகளுக்கு பின், தற்போது தான் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.