'செனாப் பாலம்' 359 மீட்டர் உயரம்.. ஈஃபிள் டவரை விட அதிகம் - ஜம்மு காஷ்மீரில் அதிசயம்!

India Jammu And Kashmir Indian Railways Railways
By Jiyath Jun 15, 2024 07:07 AM GMT
Report

ஜம்மு காஷ்மீரில் செனாப் ஆற்றின் மீது 'செனாப் பாலம்' கட்டப்பட்டு வருகிறது.

செனாப் பாலம்

ஜம்மு காஷ்மீரில் கத்ரா-பனிஹால் பிரிவில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தில் செனாப் ஆற்றின் மீது 'செனாப் பாலம்' கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் உயரம் 359 மீட்டர் ஆகும்.

இதிலும் சிறப்பு என்னவென்றால், பாரிஸ் ஈஃபிள் கோபுரத்தை விட இந்த உயரம் 35 மீட்டர் அதிகம். உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் வழியாக ரம்பானில் இருந்து ரியாசிக்கு ரயில்வே சேவை விரைவில் தொடங்கவுள்ளது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ரயில் இணைப்பு திட்டம் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கேயும் நிற்காது - உலகிலேயே மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமானம் இதுதான்!

எங்கேயும் நிற்காது - உலகிலேயே மிக நீண்ட தூரம் பயணிக்கும் விமானம் இதுதான்!

பொறியியல் அதிசயம்

இதுகுறித்து கொங்கன் ரயில்வேயின் துணை தலைமை பொறியாளர் சுஜய் குமார் கூறுகையில் "இந்த மிகவும் சவாலான திட்டத்தால் மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விரைவில் அனைத்தும் நிறைவேறும்" என்று தெரிவித்துள்ளார். ரியாசி துணை ஆணையர் விஷேஷ் மகாஜன் கூறுகையில், "இது நவீன உலகின் பொறியியல் அதிசயம். ரயில் ரியாசியை அடையும் நாள், மாவட்டத்தையே மாற்றும் நாளாக இருக்கும்.

இது பெருமைக்குரிய தருணம். இது உலகின் 8-வது அதிசயமாகும். இந்த பாலத்தை திறக்கும் சரியான தேதி சொல்ல முடியாது. ஆனால், விரைவில் அந்த நாள் வரும்" என்று கூறியுள்ளார்.