குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ₹3000 உதவித்தொகை - வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி!

Rahul Gandhi Jammu And Kashmir Election
By Vidhya Senthil Sep 24, 2024 02:23 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

 ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

 தேர்தல்

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது.அதில் முதல்கட்ட வாக்குப்பதிவு 24 தொகுதிகளில் செப்.18 ஆம் தேதி நடைபெற்றது.

raghul gandhi

மேலும் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.இது ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

இப்படி செய்ததற்கு மோடி மன்னிப்பு கேட்டாக வேண்டும் - ராகுல் காந்தி உறுதி

இப்படி செய்ததற்கு மோடி மன்னிப்பு கேட்டாக வேண்டும் - ராகுல் காந்தி உறுதி

இந்த நிலையில் 2ம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பரப்புரையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறித்தி அளித்தார். அதில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.

 வாக்குறுதி

ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும்; குடும்பத் தலைவர்களுக்கு மாதம் ₹3000 உதவித்தொகை, சுய உதவிக் குழுக்கள் மூலம் ₹5 லட்சம் வரை வட்டியில்லாக்கடன் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

election

குடும்ப ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில்₹25 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஆம்புலன்ஸ் மற்றும் மொபைல்கிளினிக் தொடங்கப்படும்;

காஷ்மீர் பண்டிட்களுக்கான மன்மோகன் சிங் திட்டம் முழுவதுமாக செயல்படுத்தப்படும்; ஜம்மு காஷ்மீரில்காலியாக உள்ள 1 லட்சம் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு, ஒவ்வொரு நபருக்கும் 11 கிலோ இலவச ரேஷன் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.