இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அலுவலகம் - ஆந்திராவில் பரபரப்பு!

Ysr Congress India Andhra Pradesh YS Jagan Mohan Reddy
By Jiyath Jun 22, 2024 07:46 AM GMT
Report

ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சி அலுவலகம்

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சீதா நகரில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான படகு இல்லம் உள்ளது. இந்த படகு இல்லம் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் இடிக்கப்பட்டது. பின்னர் அங்கு பிரம்மாண்ட ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகம் கட்டும் பணி நடந்து வந்தது.

இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அலுவலகம் - ஆந்திராவில் பரபரப்பு! | Jaganmohan Reddys Party Office Jcp Demolition

இந்நிலையில் அம்மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டுமான பணிக்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அந்த கட்சி அலுவலகத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

எனது அன்புத் தளபதி - த.வெ.க தலைவர் விஜய்க்கு ஈபிஎஸ், சீமான் பிறந்தநாள் வாழ்த்து!

எனது அன்புத் தளபதி - த.வெ.க தலைவர் விஜய்க்கு ஈபிஎஸ், சீமான் பிறந்தநாள் வாழ்த்து!

தொண்டர்கள் கோஷம்

இதுதொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில், அலுவலகத்தை இடிக்க நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனாலும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ராட்சத பொக்லைன் எந்திரங்களை கொண்டு இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை இடித்தனர்.

இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அலுவலகம் - ஆந்திராவில் பரபரப்பு! | Jaganmohan Reddys Party Office Jcp Demolition

இதனால் அங்கு குவிந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.