எனது அன்புத் தளபதி - த.வெ.க தலைவர் விஜய்க்கு ஈபிஎஸ், சீமான் பிறந்தநாள் வாழ்த்து!

Vijay Tamil Cinema Seeman Edappadi K. Palaniswami Thamizhaga Vetri Kazhagam
By Jiyath Jun 22, 2024 07:46 AM GMT
Report

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

நடிகர் விஜய் 

தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எனது அன்புத் தளபதி - த.வெ.க தலைவர் விஜய்க்கு ஈபிஎஸ், சீமான் பிறந்தநாள் வாழ்த்து! | Edappadi Palaniswami Seeman Wishes To Vijay

அந்தவகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் திரு. விஜய் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

பொதுவாழ்வில் இணைந்துள்ள திரு. விஜய் அவர்கள், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள பதிவில் "தமிழ்த்திரையுலகில் தன் திறமைமிக்க நடனம், உரையாடல், உச்சரிப்பு, உடல்மொழி,

செயலிழந்த அரசு.. மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - கொந்தளித்த எல். முருகன்!

செயலிழந்த அரசு.. மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - கொந்தளித்த எல். முருகன்!

என்னுயிர்த் தம்பி

சண்டைக்காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய ஆற்றலைப்பெருக்கி, ஆகச்சிறந்த நடிப்புத்திறனால் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் முதல் ஒவ்வொரு வீட்டிலுமுள்ள சின்னஞ்சிறு குழந்தைகள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் மனங்களையும் வென்று,

எனது அன்புத் தளபதி - த.வெ.க தலைவர் விஜய்க்கு ஈபிஎஸ், சீமான் பிறந்தநாள் வாழ்த்து! | Edappadi Palaniswami Seeman Wishes To Vijay

தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு, எல்லோரது நேசத்தையும் பெற்று உச்சம்தொட்டு உயர்ந்து நிற்கும் அன்புத்தம்பி. காலங்காலமாய் ஏமாளிகளாய் வாழும் சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்து,

மக்கள் பணியில் தம்மை ஈடுபடுத்தி, வெற்றிகொள்ள முனைந்துள்ள, எனதருமை இளவல், எனது அன்புத்தளபதி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், என்னுயிர்த் தம்பி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.