தன் பெயரை கூட சொல்ல முடியாமல் திணறிய ஜெகன்மோகன் ரெட்டி..வைரலாகும் வீடியோ!
முன்னாள் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி தனது பெயரை சொல்ல தடுமாறினார்.
ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திர மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல் நிகழ்ந்தது. இதன் முடிவுகள் ஜூலை வெளியானது. இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து, முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். அந்த பதவியேற்பு விழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதேபோல துணை முதல்வராக ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் பதவியேற்றார். ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
சொல்ல முடியாமல் திணறிய
போட்டியிட்ட 175 தொகுதிகளில் வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி அடைந்தது. இந்த நிலையில், வெற்றி பெற்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்களாக பதவி ஏற்று கொண்டனர். இதையொட்டி, சட்டமன்றத்திற்கு வந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு நுழைவு வாயிலில் விழுந்து வணங்கினார்.
முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது இனி சட்டமன்றத்திற்குள் முதலமைச்சராக தான் அடி எடுத்து வைப்பேன் என்று கூறிய சந்திரபாபு நாயுடு சொன்னதைப் போலவே சட்டமன்றத்தில் முதல்வராக அடி எடுத்து வைத்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
அப்போது தனது பெயரை கூட முழுமையாக சொல்ல முடியாமல் தடுமாறிய அவர், ஒரு வழியாக பதவியேற்று கொண்டார். பின்னர், சபாநாயகரை சந்தித்து வாழ்த்து கூறிவிட்டு சென்றார். இவ்வாறு அவர் திணறிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
CM Chandrababu Naidu, Dy CM Pawan Kalyan & Ex CM YS Jagan took oath in #AndhraPradesh Assembly
— Naveena (@TheNaveena) June 21, 2024
Chandrababu Naidu bows before entering the assembly. On Nov 19, 2021 he made a statement that he will come back to Assembly only as CM. pic.twitter.com/oiQO3P0kx8