திரைப்படத்தை மிஞ்சும் பிரமாண்டம்; 500 கோடியில் ரகசிய பங்களா - சிக்கிய ஜெகன் மோகன் ரெட்டி!
ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ரூ500 கோடி பங்களா அரசியலில் அனலை கிளப்பியுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி
நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தார். தெலுங்கு தேச கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பின் அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அம்மாநில முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
கடந்த வாரம் ஹைதராபாத்தில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டின் முன் பகுதி சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறி இடிக்கப்பட்டது.
தற்போது விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷி கொண்டா மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த சொகுசு மாளிகை விவகாரம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி
இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏவான காந்தா ஸ்ரீநிவாஸ் இந்த பங்களாவை நேரில் சென்று பார்வையிட்டு புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
500 கோடி மதிப்பில் ஓ எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது கட்டப்பட்ட இந்த பிரம்மாண்டமான வீடு முதலமைச்சரின் முகாம் அலுவலகமாக பயன்படுத்தப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது என்றும் கட்டிடம் கட்டும் பணியையும் மூடி மறைத்து வைத்திருந்தனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் இந்த குளியல் அறையில் உள்ள குளியல் தொட்டியின் மதிப்பு மட்டும் சுமார் 26 லட்சம் என்றும் தெரிவித்துள்ளார்.
இது பிரதமர், குடியரசு தலைவர் போன்ற முக்கிய தலைவர்கள் விசாகபட்டினத்திற்கு வருகை தரும் போது தங்குவதற்காக கட்டப்பட்டது. இது அரசு செலவில் கட்டப்பட்ட அரச மாளிகை என ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
விரிவான விசாரணை
இதற்கு பதிலடி கொடுத்த தெலுங்கு தேச கட்சி, அரசு கட்டடங்கள் என்றால் அதை ஏன் மறைத்து வைக்க வேண்டும். பிரதமர், குடியரசு தலைவர் தங்குவதற்கான கட்டடம் என்றால் எதற்காக கட்டடத்தை சுற்று முள்வேலி அமைத்து மக்களிடம் இருந்து இந்த மாளிகையை மறைக்க வேண்டும்?
இது பிரதமர், குடியரசு தலைவர் தங்குவதற்காக கட்டப்பட்ட மாளிகை என்றால் அங்கு ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர்கள் செல்வது ஏன்? இந்த இடம் 9.9 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.