ரூ.1.34 லட்சத்திற்கு முதலை தோல் செருப்பு அணிந்த முதலமைச்சர் - எதிர்க்கட்சி குற்றச்சாட்டு!
லட்சக்கணக்கில் முதலையின் தோலினால் செய்யப்பட்ட செருப்பை அணியும் முதலமைச்சர் குறித்து எதிர் கட்சியினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
ஆந்திரா முதல்வர்
தற்போது ஆந்திர பிரதேசத்தின் முதலமைச்சராக இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி.
இவரது சொத்து மதிப்பு குறித்து தெலுங்கு தேச கட்சியின் செய்தி தொடர்பாளர் வெங்கட்ரமணா ரெட்டி பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர், "கடந்த 2004-ம் ஆண்டு முதலமைச்சரின் சொத்து மதிப்பு ரூ.1.70 கோடியாக இருந்தது. 2009-ம் ஆண்டு இடைத்தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் ரூ.77 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
2011-ம் ஆண்டு ரூ.445 கோடியாக சொத்து மதிப்பு அதிகரித்தது. பின்னர், 2019-ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு ரூ.510 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.
ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றதும் பல கோடி ரூபாய் அவரது வங்கி கணக்கிற்கு வந்தது" என்று கூறினார்.
குற்றச்சாட்டு
இதனை தொடர்ந்து, அவர் அளித்த பேட்டியில், "அவரிடம் உள்ள கருப்பு பணத்தை கணக்கிட்டால் பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும்.
இவ்வளவு சொத்து மதிப்பை வைத்துக்கொண்டு அவர் தனக்கு சொந்தமாக வீடு இல்லை என பேசி வருகிறார்.
ஜெகன்மோகன் ரெட்டி அணியும் செருப்பு புல்லோட்டி காம்போ என்ற நிறுவனத்தினால் முதலை தோலால் செய்யப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.1.34 லட்சம். அவர் குடிக்கும் மினரல் வாட்டர் ஒரு பாட்டிலின் விலை ரூ.5,500. இப்படி விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எப்படி ஏழைகளின் பங்காளன் என்று கூறுகிறார்.
அவருடைய சொத்து விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.