இந்தியா, இலங்கைக்கு கடன் கொடுப்பது அவசியமற்றது - சீமான்
அதிமுக பஞ்சத்திற்கு திருடர்கள் என்றால் திமுக பரம்பரை திருடர்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் கட்சி நிர்வாகியின் வீட்டில் பெருஞ்சித்திரனார் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
சீமான் பேட்டி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,தமிழ் தேசிய அரசியலை விதைத்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவரை நினைவு கூறுவதில் பெருமை அடைகிறோம்.
நபிகள் நாயகம் குறித்து நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பா.ஜனதா பேசி நாட்டைத் துண்டாடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டாம் என்று சொல்லும் பா.ஜனதா அவர்களுடைய வரி வேண்டாம் என்று சொல்லுமா?.
இலங்கைக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் எதற்காக கொடுக்க வேண்டும். அவர்கள் நமக்கு விசுவாசமாக இருப்பார்களா?
18 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது கச்சதீவை மீட்க தி.மு.க.விற்கு சரியான நாள் வரவில்லையா?
தமிழகத்தில் இருந்து நிவாரணம் அனுப்பிய நிலையில் அதனால் பொருளாதார நெருக்கடியோ? சிக்கலோ தீர்ந்துவிடும் என்று தான் நம்பவில்லை.
அதைவிட மோசமான நிலைக்கு இந்தியா செல்வதாகவும்,அதனால் பின் விளைவுகள் என்ன வரும் என்று கணிக்க முடிவதாக தெரிவித்தார்.
இங்கு தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தான் பகை. இதற்கு இடையில் திராவிடம் என்பது போலி. பா. ஜனதா மாநில தலைவர் ஊழல் பட்டியலை வெளியிடுகிறார்.
ஊழலைப் பற்றி பேசுபவர், எதற்காக ஊழல் கட்சிகளோடு கூட்டணி வைத்து உள்ளார். ஊழல் கட்சிகளின் தலைவர் சிலையை திறந்து வைப்பதற்கு ஏன் துணை குடியரசுத் தலைவர் வரவேண்டும்?
பா.ஜனதா கட்சி தனித்து போட்டியிட தயாரா? உள்ளாட்சி தேர்தலில் 100 கோடி ரூபாய் செலவு செய்த கட்சி பா ஜனதா. அ.தி.மு.க. பஞ்சத்திற்கு திருடர்கள். தி.மு.க. பரம்பரை திருடர்கள்.
ஆதினங்களை பல்லக்கில் வைத்து தூக்குவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் அது காலம் காலமாக உள்ள சம்பிரதாயம் என்பதால் தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ப நவீன எந்திரங்கள் கொண்டு இழுக்கலாம்.
தமிழகத்தில் எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி தான் செயல்படுகிறது என்று கூறினார்.